திருமணத்திற்கு முந்தைய காதலன்! ஆசைக்கு இணங்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

4402

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்கும், மகாராணி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு மகாரணிக்கு, இளவரசன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு கணவர் கண்டித்ததை தொடர்ந்து, மகாராணி இளவரசனிடம் இருந்த பழக்கத்தை முறித்துக்கொண்டுள்ளார். ஆனாலும் இளவரசன் தொடர்ந்து மகாராணியை பேச சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான்.

அதற்கு மகாராணி ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் மகாராணி வீட்டில் தனியாக இருந்த போது வந்த இளவரசன், மகாராணியை பிளோடு கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகாராணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில், தென்காசி நீதிமன்றத்தில் இளவரசன் சரண் அடைந்தான்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் ஆண் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேசுவதை தவிர்த்தாலே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்று சுட்டிக்காட்டும் காவல் துறையினர், வீடு தேடி வரும் இதுபோன்ற வில்லன்களைத் தவிர்ப்பதும், ஏற்பதும் பெண்கள் கையில் மட்டுமே உள்ளது என்கின்றனர்.

Advertisement