“உல்லாசமாக இருக்கலாம் வா..” குஷியில் சென்றவருக்கு கும்மாங்குத்து..

8979

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக கூறப்படுகிறது.

இதே நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண்கள், சிவக்குமாருக்கு பாடம் புகற்ற நினைத்துள்ளனர். இதனால், உல்லாசமாக இருக்கலாம் வா என்று பல்லடம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு, சிவக்குமாரை அழைத்துள்ளனர்.

அங்கு வந்த அவருக்கு, பெப்பர்ஸ் ஸ்பிரே அடித்த பெண்கள், கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும், காயமடைந்த இடத்தில், மிளகாய்தூளை தூவியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 3 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதன்பேரில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சிவக்குமார் முதலில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சிவக்குமார் அளித்த புகாரில், அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

பிறகு, ஜாமீனில் வெளியே வந்த 2 பெண்களில் ஒருவர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, சிவக்குமாருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் அளித்துள்ளார். இதனால், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.