மணிரத்தினம் சொல்லும் பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan

582

தனக்கென தனி பாதையை வகுத்து அதன் வழி தனது தடம் பதித்து செல்லும் இயக்குனர்கள் மத்தியில் தலைசிறந்தவர் மணி ரத்தினம். கேமெராவின் வழி இவர் காட்டும் காட்சிகள் இவர் பெயர் சொல்லும் என்பதற்கு மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் தொடங்கி செக்கச் சிவந்த வானம் வரை பல படங்கள் சாட்சி.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிவருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் என்று செய்திகள் வெளிவந்தன.

தற்போது ஐஸ்வர்யா ராய், விக்ரம், இயக்குனர் நடிகர் பார்த்திபன், ஜெயராம், அமலா பால் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க உள்ளார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of