மோடி சாதி குறித்து பேச்சு! சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்!

550

காங்கிரஸ் மூத்த தலைவரான மணி ஷங்கர் அய்யர், கடந்த டிசம்பர் மாதம் 2017-ல் குஜராத் சட்டசபை தேர்தலின் போது, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

‘பிரதமர் மோடி ஒரு தாழ்ந்த சாதியை சார்ந்தவர்’ என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அவரை இரண்டு வருடங்களுக்கு பதவி நீக்கம் செய்தது காங்கிரஸ்.

இந்நிலையில் ‘நான் முன்னதாக கூறியது தற்போது நிரூபிணமாகியுள்ளது’ என மணி ஷங்கர் அய்யர் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி ஜாதி குறித்து அவர் பேசியது, மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இவரின் இந்த சர்ச்சைப்பேச்சுக் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறுகையில், இது அவரது சொந்தக்கருத்து. இதற்காக காங்கிரஸ் கட்சி வெட்கப்படவும் இல்லை, அந்த கருத்தை தாங்கள் ஆதரிக்கவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of