“முதல்வரை…,” ! மணிகண்டன் சொன்ன அதிரடி பதில்..!

532

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார்.

கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவரும் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உங்களை பதவியில் இருந்து நீக்கியது குறித்து முதலமைச்சரை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மணிகண்டன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை என்று தெரிவித்தார்.