சிறுமியை கதற விட்ட ஊழியர்கள்..! அரசு கொடுத்த பெரிய கிஃப்ட்..!

424

மணிப்பூரில் கக்சிங் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருக்கு சாயா என்ற மனைவியும், வாலண்டினா என்ற 9 வயது மகளும் உள்ளனர்.

சிறு வயதில் இருந்தே செடி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட வாலண்டினா, தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றங்கரை ஒன்றில் இரண்டு மரக்கன்றுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் ஆற்றங்கரையை சுத்தம் செய்வதற்கு ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த சிறுமியின் மரக்கன்றுகளையும் வெட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.

இதனை சிறுமியின் உறவினர் ஒருவர், தனது மெபைல் போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்வரும் பார்த்துள்ளார். இதையடுத்து மணிப்பூர் மாநில அரசின், பசுமை திட்ட தூதுவராக வாலண்டினாவை நியமித்து உத்தரவிட்டார்.