“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு..!

5137

பாஜக-வுடன் இணைந்து காவல்துறை டெல்லி போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. குறிப்பாக டெல்லி, வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி கடுமையாக தாக்கியும் வருகின்றனர்.


காவல்துறையோடு இணைந்து பாஜக-வை சேர்ந்தவர்களும் மாணவர்களை தாக்குவதாகவும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா, பாஜக காவல்துறையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுவருதாகவும், பேருந்துகளுக்கு தீவைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இது மிகவும் கீழ்த்தனமான அரசியல் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மற்றுமொரு டுவிட்டர் பதிவில்,தென்கிழக்கு டெல்லியில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமையும்(இன்றும்) விடுமுறை என அறிவித்துள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அப்பல்கலைகழக நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து காவல்துறை வெளியாட்களை வைத்து வன்முறை நிகழ்த்துகிறது என பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of