அரையிறுதிக்கு முன்னேறிய மஞ்சு ராணி | Women Boxing Championship

383

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த காலிறுதிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 48 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரும், கடந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றவருமான கிம் ஹயாங் மியை (தென்கொரியா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

மேலும் 54 கிலோ உடல் எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜமுனா போரா 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் உர்சுலா கோட்லோப்பை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of