அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்..? கேட்டா துள்ளி குதிப்பீங்க..!

969

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படத்திற்கான பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, அஜித் எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அஜித் ரசிகர்களின் ஆல் டைம் பேவரட்டான மங்காத்தா படத்தின் 2-ஆம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தல அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என்று இயக்குநர் வெங்கட்பிரபு முன்னரே கூறியிருந்தார்.

அந்த படம் மங்காத்தா இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் அல்லது வேறு எதாவது கதையாகவும் இருக்கலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மங்காத்தா -2 படத்தின் கதையை அவர் எழுதி முடித்துள்ளதாகவும், அந்த கதையை போனி கபூரிடம் வெங்கட் பிரபு கூறியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், இந்த கதை பிடித்துள்ளதால், அஜித்தை வைத்து எடுப்பதற்காக போனி கபூர் ஆலோசனையும் நடத்தி வருகிறாராம்.