ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது

580

ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், அரசியல் நடைமுறையில் மதவாதம் என்ற கிருமியைப் பரப்பி வருவதாக தெரிவித்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக உள்ள மதச்சார்பின்மையை, பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளதாக கூறினார்.

இதேபோல், தேர்தல் நடைமுறைகளில் மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார்.

ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்க கூடாது என்றும், மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.