தேர்தலுக்காக ராணுவத்தின் தியாகங்களை பயன்படுத்துவது வெட்கக்கேடானது! மன்மோகன்சிங் ஆவேசம்!

1026

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசியது பின்வருமாறு:-

“பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பிரதமர் மோடி தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றது, அவற்றை தேர்தலில் வாக்குகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. பாஜக அரசின் பல்வேறு தோல்விகளை மறைப்பதற்காகவே ராணுவ நடவடிக்கைகள் அரசியலாக்கப்படுகின்றன.

ராணுவத்தின் தியாகங்களை தேர்தலுக்காக மோடி அரசு பயன்படுத்திக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பாஜகவின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானவை.”

இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement