தற்கொலைக்கு முயன்ற நபர்! பாய்ந்து வந்து காப்பாற்றிய கமாண்டோ! சினிமாவை மிஞ்சும் த்ரில்!

700

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஒருவர் வந்து புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சரியாக விசாரிக்கவில்லை என்று கூறி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் உச்சிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து, அந்த நபரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் தப்பித்தவறி கீழே குதித்தாளும் காப்பாற்றுவதற்கு கம்பளங்கள் விரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது திடீரென பாய்ந்து வந்த கமாண்டோ படை வீரர், அந்த நபரை அருகில் இருந்த சிறிய இடத்தில் தள்ளி காப்பாற்றினார்.

கமாண்டோ படை வீரரின் சாதுர்யம் மற்றும் துணிச்சலை அங்கிருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.