முகிலனை கண்டுபிடிக்கவில்லையெனில் தேர்தலை நடத்த விடமாட்டேன் – மன்சூர் அலிகான் ஆவேசம்

403

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக ஆர்வலர் முகிலன் கிடைக்கும் வரை தேர்தலை நடத்த விடமாட்டேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், முகிலன் கடத்தப்பட்ட விவகாரத்திற்கு காவல் ஆணையர் முதல் சென்னை கமிஷனர் வரை பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்தார்.