ஓட்டு போடலைனா! ஓட்டை போட்ருவேன்! இஸ்திரி போடுபவரிடம் மன்சூர் பன்ச்!

405

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான், வித்தியாசமான முறையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அப்பகுதியில் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தபோது, இஸ்திரி போடுபவரின் கடைக்குள் சென்று, நான் அயர்ன் பண்ணுகிறேன் என்று சொன்னார்.

ஒரு துணியை எடுத்து இஸ்திரிபோட்டு கொண்டே இருந்தவர், ‘எனக்கு ஓட்டு போடலைன்னு வெச்சுக்குங்க, இந்த துணியில ஓட்டை போட்டுடுவேன்’ என்று நகைச்சுவையாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இவ்வாறு இவர் புதுமையான முறையில் அப்பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of