பிரச்சார களைப்பில் “குறட்டை விட்டு” தூங்கிய மன்சூர்அலிகான்!

492

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரங்களில் சற்று புதுவிதமாக, நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் மன்சூர் அலிகான் செய்து வருகிறார். இந்நிலையில், பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த அவர், மதியம் சாப்பாடு சாப்பிட்டார்.

சாப்பிட்டவுடன் உண்ட களைப்பு ஒரு பக்கம், வெயிலின் தாக்கம் மறுபக்கம். அதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு அரசு பள்ளி வளாகத்துக்குள் சென்றார். அப்படியே படுத்து அங்கு தூங்க ஆரம்பித்துவிட்டார். மன்சூரலிகான் தூங்குவதை பார்க்க அங்கே பெரிய ஒரு கூட்டமே கூடிவிட்டது.

இதைதவிர விஷயம் கேள்விப்பட்டு ஊர்ஜனங்கள் வந்து மன்சூர் தூங்குவதை பார்த்து விட்டு சென்றார்கள். பள்ளி மாணவர்கள் அங்கே ஒரே கூச்சல் போட்டதால் கொஞ்ச நேரத்திலேயே எழுந்துவிட்டார் மன்சூர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of