தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாமதம், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது

1352

RTI மனுக்கள் மீது தகவல் உரிமை ஆணையத்தின் விளக்கம் காலதாமதமாக வருவதால், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன், தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தகவல்களை பெறுவோர் மனு அளித்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மனு அளித்தும் அதற்கான விளக்கம் வருவதற்கு தாமதம் ஆவதாகவும், குறிப்பாக 2015ம் ஆண்டில் வந்த150 வழக்குகளில், சரசரியாக 48 வழக்குகளுக்கு மட்டுமே தகவல் ஆணைய தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2016 ஆம் ஆண்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகளும், 2017ம் ஆண்டு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். விண்ணபித்து 15 மாதம் கழித்து விளக்கம் அளிக்கப்படுவதால், சராசரி மனிதர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், தகவல் உரிமை ஆணையத்தில் மனுக்கள் அளித்தால், அதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement