நரியை போட்டுத்தள்ளிய கோழிகள்! எங்கக்கிட்டயேவா!!

477

ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தனியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன.

கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது. கோழிகளிடம் அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை குத்திக் கொன்றிருக்கின்றன என்கிறார் கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல்.

அந்த நரியின் உடல் அடுத்தநாள் கோழிக் கூண்டு பகுதியின் மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

”அக்கோழிகள் நரியின் கழுத்தில் கொத்தியுள்ளன. நரியின் கழுத்தில் அந்த காயங்கள் தெரிந்தது,” என செய்தி முகமையிடம் டேனியல் கூறியுள்ளார்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த கோழிப் பண்ணையில் அதிகபட்சம் ஆறாயிரம் பிரீ ரேஞ்ச் கோழிகள் அடைத்து வைக்கப்படலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of