பேருந்து மற்றும் லாரிக்கு தீ வைப்பு… நக்சலைட் அட்டூழியம்!

426

மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சரிவெல்லா என்ற கிராமம் அருகே மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டனர்.அதன் பின் அந்த வழியாக வந்து கொண்டிருந்த தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றையும், தனியார் லாரி ஒன்றையும் நேற்று இரவு தடுத்து நிறுத்தி

பேருந்தில் இருந்த பயணிகளை மிரட்டி கீழே இறங்க செய்த மாவோயிஸ்டுகள் பேருந்து மற்றும் லாரிக்கு தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தில் பேருந்து, லாரி ஆகியவை தீப்பற்றி முழுவதும் எரிந்து நாசமானது.

வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிழக்கு கோதாவரி மாவட்ட போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மாவோயிஸ்ட் இயக்கம் மீது மத்திய அரசு தன்னுடைய பிடிகளை இறுக்கி உள்ளது. நாளை 31ம் தேதி பந்த் நடத்த மாவோயிஸ்ட் இயக்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.