டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’

979

பேட்ட படத்தின் பாடல் வீடியோ படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் வெளியானது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிரூத் முதன் முறையாக ரஜினியுடன் பேட்ட படத்திற்காக கைகோர்த்துள்ளார். பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்பாக படத்தின் ‘மரண மாஸ்’ சிங்கிள் டிராக் சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விடியோவை தற்போது 3 மில்லியனுக்கு மேலானோர் பார்த்துள்ளனர்.