பிரபல நடிகை பூஜா உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

6269

உயிருக்கு போராட கூடிய நோயாளிகளை மிகவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சிற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னல்களில் நிற்க வேண்டாம், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் மற்ற வாகனங்களுக்கு அபராதம் என பல்வேறு சலுகைகள் உள்ளது.

இத்தனைக்கும் காரணம், அந்த வாகனம் ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு வாகனம் என்பதால் தான். ஆனால் நம் நாட்டில் சில சமயங்களில் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாளும், சரியான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதில்லை.

இதற்கு சில தனியார் மருத்துவத்துவமனைகளும் காரணம் என்று கூறப்படுகிறது. அருகில் வேறு எதாவது அரசு மருத்துவமனை இருந்தாளும், நோயாளிகள் தூரமாக உள்ள பிற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை பூஜா ஸுஞ்சர். 25 வயதான இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்கு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு நடந்த பிரசவத்தில், குழந்தை உயிரிழந்தது. தாயின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்ததால், உரிய நேரத்திற்குள் பூஜாவை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் மராத்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆம்புலன்ஸ் தாமதாமானதே தனது மகள் உயிரிழந்ததற்கு காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of