இனி ஜாலியா போகலாம் மெரினாவுக்கு…

519
மெரினா கடற்கரை

கடந்த 30-ம் தேதி மெரினா திறப்பு தொடர்பாக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக மெரினாவுக்கு சென்று வருகின்றனர்.

சென்னையில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிடவும் முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை.

Advertisement