புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடக்கும். – ராஜ் தாக்ரே

171
rajthakre11.3.19

புல்வாமா தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் மக்களவை தேர்தல் நடப்பதற்கு முன் நடத்தப்படலாம் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே பேசி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் 13 -வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜ்தாக்ரே, பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது அவர், ”நான் சொல்வதை குறித்து வைத்து கொள்ளுங்கள். அடுத்த 2 மாதங்களில் புல்வாமா தாக்குதலை போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்.

இதன் மூலம், மக்களவை தேர்தலின் போது, மக்களின் கவனத்தை அனைத்து பிரச்னைகளில் இருந்தும் திசை திருப்பி, தேசபக்தியின் பக்கம் திருப்பி விடப்படும்.

ராமர் கோவில் கட்டுதல் உள்பட அனைத்து கொள்கைகளிலும் மத்தியில ஆளும் பாஜக அரசு தோல்வியை சந்தித்து உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.