மக்களை ஏமாற்றுவதற்கே மோடி தமிழில் பேசுகிறார்- ஸ்டாலின்

571

திருமண நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதன் பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின்…,

சுயமரியாதை சீர்த்திருத்த திருமண நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும். அதுமட்டுமின்றி, 21 தொகுதி சட்ட மன்ற இடைதேர்தலினை நாடாளுன்ற தேர்தலோடு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் 6 மாதத்திற்குள் சட்ட மன்ற தேர்தலினை நடத்த வேண்டும் என்றும் இத்தேர்தலை தடுக்கும் முயற்சில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்.

மக்களை ஏமாற்றுவதற்கே மோடி தமிழில் பேசி வருகிறார். மோடி தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது வருத்தத்தை அளிப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து முறையாக தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.