144 தடை : பத்தே நிமிடத்தில் நடந்து முடிந்த திருமணம்

781

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் பத்தே நிமிடத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக எங்கும் கூடக்கூடாது என்பதால் திருமண நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விழுப்புரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  முரளிதரன் என்பவருக்கும், மீனா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பெண் வீட்டார் தரப்பில் 2பேர் ,மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் 2 பேர் என 4 பேர் மட்டும் பங்கேற்ற மிக எளிமையான திருமணம் பத்தே நிமிடத்தில் நடந்து முடிந்தது.

Advertisement