இந்து முறைப்படி மசூதியில் திருமணம்..! அசத்திய முஸ்லிம் ஜமாத் மக்கள்..!

1107

கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர் பிந்து. இவரின் கணவர் அசோகன் இறந்துவிட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார்.

தனது கணவர் அசோகன் இறந்தபின் மிகவும் வறுமையிலும், சிரமத்திலும் பிந்து வாழ்க்கையை நடந்தி வந்த பிந்து தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தார்.

ஆனால், திருமணச் செலவுக்கு போதுமான பணம் பிந்துவிடம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்திடம் சென்று தனது நிலைமையைக் கூறி உதவக் கோரினார்.

மதம் கடந்த உதவி கோரி வந்திருக்கும் பிந்துவின் குடும்பத்தினருக்கு உதவ முஸ்லிம் ஜமாத் மக்கள் முன்வந்தனர்.

திருமண மண்டபம் செலவை குறைக்க செருவாலி மசூதியில் இன்று காலை சரத், அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி அர்ச்சகர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of