பிறந்த வீட்டுப் பெருமை பேச வேண்டாம்

484
Marriage-Life-of-a-Girl

குடும்பம் என்றால், பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அந்தப்பிரச்சனையை, “என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்” என்று சில பெண்கள் கணவரை மிரட்டுவர். இப்படிச் செய்தால், கணவரின் வெறுப்பைத்தான் சம்பாதிக்க முடியும். இது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். உங்கள் அமைதியினாலும், பொறுமையினாலும் மட்டுமேதான் இது போன்றபிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

குடும்ப வாழ்க்கையில், உனது கணவர்மீது நம்பிக்கைகொள். எதற்கெடுத்தாலும் சந்தேகப் படாதே. ஏதாவது கேள்விக் குறிகள் எழுந்தால், இருவரும் நேரடியாக அமர்ந்து அமைதியாக பேசுங்கள். குடும்பம் என்பது ஒரு கோவில் என்பதை நீங்கள் இருவரும்தான் இணைந்து  நிரூபிக்கவேண்டும். உங்கள் இடையே மூன்றாவது நபர் சமரசத்துக்கோ, சமாதானத்துக்கோ, எதற்கும் தேவை இல்லை.

– ஜாய் ஐசக்

(இனியவளே உனக்காக)