அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

283

குமரி , மார்த்தாண்டம் பகுதியில் கணினி விற்பனை மையம், மின்சாதன பொருட்கள் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 3 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு 85 ஆயிரம் ரூபாய் பணம், 14 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement