பிரை லார்சன் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக வெளிவந்த `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பரபரப்பான இந்த படத்தின் இறுதியில் வில்லன் தானோஸ் வெற்றி பெறுவது போலவும், பாதி உலகை அழித்துவிடுவது போலவும் படம் முடிக்கபட்டது. படத்தின் முடிவில் திரையிடப்படும் எண்டு கிரடிட்ஸில் ஷீல்டின் தலைவரான நிக் ஃப்யூரி உலகை மீட்க கேப்டன் மார்வல் எனும் சூப்பர் ஹீரோவை உதவிக்கு அழைப்பது போல் காட்சி இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் கேப்டன் மார்வல் படத்தின் டீசர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. கேப்டன் மார்வல் படம் வெளியான அடுத்த மாதமே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரின் இறுதி பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கண்டிப்பாக அவெஞ்சர்ஸை எப்படி மீட்கப் போகிறார்கள், தானோஸ் என்ன ஆகபோகிறான் என்பது குறித்து காட்சிகள் இடம்பெற்று இருக்கும் என்று மார்வல் ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.