திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

455

திமுக கூட்டணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில்  காங்கிரசுக்கு 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய ஜன நாயக கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கட்டிருந்த நிலையில் தற்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of