தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

271

சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட்டார்.

அதன் முக்கிய அமசங்கள் வருமாறு,

 1. அனைவருக்கும் வீடு
 2. தாய்மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்குவது
 3. தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ்
 4. தேசிய நதி நீர் கொள்கையை உருவாக்குவது
 5. தமிழகத்திற்கான நீர் உரிமையை பெறுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
 6. அனைவருக்கும் உரிய வேலை கிடைக்கும் வரை வேலையில்லா காலத்துக்கு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்துவோம்.
 7. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை விடுப்போம்.
 8. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்வதோடு ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
 9. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
 10. காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்வோம்.
 11. வங்கிகளில் வாராக்கடன் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளின் பட்டியலை வெளியிடுவது. பாக்கி தொகையை முழுமையாக வசூலித்து பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்துவோம். என மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of