பயங்கரவாதி மசூத் அசார் இறந்துவிட்டாரா?

343

கடந்த மாதம் பிப்.14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் பொருப்பேற்றனர்.

இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனி தடுத்தது. இருப்பினும் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் வகையில் பிரான்ஸ் ஐ.நா நடவடிக்கை எடுக்கிறது.இதற்கிடையே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் இருக்கும் தொடர்பை பாகிஸ்தான் உறுதி செய்தது. அந்நாட்டு மந்திரி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிடம் கேட்டோம், ஆனால் புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என கூறிவிட்டது என கூறினார். அசாருக்கு சிறுநிரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே இந்திய விமானப்படை பலாகோட்டில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது இயக்கம் அறிவித்தது.

இப்போது பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்துவிட்டான் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசார் காயம் அடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of