அடிப்பணிந்த பாகிஸ்தான்.., மசூத் அசார் சகோதர் உட்பட 44 பேர் கைது

509

கடந்த மாதம் காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பொருப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தடைசெய்ய வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தன.

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ரவூப் மற்றும் ஹம்மாத் அசார் உள்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று தெரிவித்தனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி ஷெஹ்ர்யார் அஃப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களை முடக்கும் நாடு தழுவிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் இன்னும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of