திரளானோர் திரண்டு போராட்டம் ! காரணம் ராகுல் காந்தி

258

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், அதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவெடுத்தார்.

ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்துகொண்டனர்.

அப்போது, ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி அவர்களுக்கு பிடி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு அவர் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of