வெளிநாட்டில் பெரும் சாதனை படைத்த மாஸ்டர்..!

806

நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது. விஜயின் மற்ற படங்களுக்கு இல்லாத வகையில், மாஸ்டருக்கு மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த அளவிற்கான ஆவல், இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 காட்சிகள் மாஸ்டர் படத்திற்காக திரையிடப்படுகின்றன.

இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement