“இணையத்தில் மாஸ்டர் பட காட்சிகள்” – படக்குழு அதிர்ச்சி

516

திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. பெருந்தொற்று பிறகு வெளியாகும் மிகப்பெரிய படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது, படக்குழுவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை தியேட்டரில் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புவதாகவும், இந்தப் படம் தொடர்பான காட்சிகளை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் படக்காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

Advertisement