மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு.. – படக்குழுவிற்கு நன்றி தெரிவித்த இயக்குனர்..!

568

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடித்து வந்த மாஸ்டர் படப்படிப்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் விஜய்க்கு அன்பு முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி.

இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகின. ஏற்கனவே படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ”129 நாட்கள் ஓய்வின்றி நடந்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த பயணம் என் மனதிற்கு நெருக்கமானது. என் மீதும், என் குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த விஜய்க்கு நன்றி.

என் குழு இன்றி இந்த கடினமான பணியை செய்திருக்க முடியாது. அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணியை துவக்கி உள்ளனர். ஏப்ரலில் படத்தை வெளியிட உள்ளனர்.