ஒடிடியில் ரிலீசாகும் மாஸ்டர் திரைப்படம்..? அதிர்ச்சி காரணம்..!

1836

மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம், கடந்த ஏப்ரல் மாதமே தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெருந்தொற்று பரவல் காரணமாக தள்ளிப்போனது.

தற்போது தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், அந்த படத்தின் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தொற்று பயம் காரணமாக, திரையரங்குகளுக்கு ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

இதனால், விநியோகஸ்தர்கள் குறைந்த விலைக்கு படத்தை வாங்க நினைப்பதாவும், இதன்காரணமாக நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

இதுகுறித்து விரைவில் படக்குழு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் படம் என்றால், எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கிக் கொள்ளும் விநியோகஸ்தர்கள், இந்த படத்திற்கு தயக்கம் காட்டுவது, ரசிகர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.

Advertisement