மாஸ்டர் திரைப்படம் எப்படி உள்ளது..? திரைவிமர்சனம்..!

1738

படத்தின் கதை:-

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நடக்கும் கொடூரமாக விஷயத்திற்கு பிறகு பவானி ( விஜய்சேதுபதி ) மோசமான ஒரு நபராக மாறிவிடுகிறார். மேலும், அந்த சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களையும், தனக்கான பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார். ஒரு கட்டத்தில், அந்த பள்ளிக்கு வரும் ஜேடி ( விஜய் ), பவானியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.

விமர்சனம்:-

படத்தில் விஜயின் நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. விஜய்சேதுபதியும் தனது வழக்கமான ஸ்டைலில் பலரையும் வியப்பூட்டுகிறார். கேமரா, எடிட்டிங், இசை போன்ற காரணிகள், படத்தின் விறுவிறுப்பை மேம்படுத்துகிறது.

ஆனால், படத்தின் மையக் கரு ஆரம்பிக்கும் இடமானது, நீளமாக இருப்பதால், ரசிகர்கள் சில நேரங்களில் சோர்வடைகின்றனர். மேலும், இறுதிக் கட்சிக்கு முந்தைய 20 நிமிடங்கள், பரபரப்பை குறைத்து விடுவதாகவே உள்ளது. ஆனால், இறுதியில் பலரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸை கொடுத்து, லோகேஷ் கனகராஜ் அசத்திவிடுகிறார்.

படத்தின் ப்ளஸ்:-

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பு, கேமரா, எடிட்டிங், இசை

படத்தின் மைனஸ்:-

நீளம், படத்தின் மூலக்கதைக்கு எடுத்த நேரம்

ஒட்டுமொத்தத்தில் மாஸ்டர் செம மாஸ்.

Advertisement