மாணவனுக்கு ஆசிரியர் செய்த கொடூரம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த கல்வி அலுவலர்..!

553

புதுக்கோட்டை மாவட்டத்தில் தூயமரியன்னை அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருளாநந்தம் என்ற கணித ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மாணவர்களுக்கு செய்முறை பதிவேடு எழுதி வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் செய்முறை பதிவேடு எழுதாமல் பள்ளிக்கு வந்த நஜிபுர் ரகுமான் என்ற மாணவனை, அருளாநந்தம் பிரம்பால் அடித்துள்ளார்.

இதில், கால் மற்றும் முதுகு பகுதியில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிற்கு சென்றபோது, மகனுக்கு அடிப்பட்டதை பெற்றோர் பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அருளாநந்தத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement