நண்பரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நண்பர்

447

பர்சில் இருந்த பணத்தை எடுத்ததால், நண்பரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.

வேப்பம்பட்டை சேர்ந்த முரளி அவரது நண்பர்களான கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன், உள்ளிட்ட 4 பேர் மதுரவாயலில், வாடகை வீட்டில் தங்கி, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.

நேற்று இரவு முரளியும்,சிம்சனும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், முரளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு சிம்சன் தப்பிச்சென்றார். இது குறித்த புகாரைத்தொடர்ந்து சொந்த ஊர் தப்பிச்சென்ற சிம்சனை பண்ருட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.

Advertisement