மாட்டு பொங்கல் விடுமுறை ரத்தா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

770

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் குடும்பத்தினர் ஒன்றிணைந்து கொண்டாவது வழக்கம். இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், பிரதமர் மோடியின் உரையை கேட்க 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சுற்றறிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜனவரி 16ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை என்றும் வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வுகளை சந்திப்பது குறித்து ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of