மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்

754

காஞ்சிபுரத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட யாதவர் தெருவில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீட்டு முன்பு நேற்று இரவு முதல் வண்ண கோலங்களிட்டு வந்தனர்.

தை திங்கள் இரண்டாம் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.

மேலும் அந்த வீதி முழுவதும் கால்நடையின் அவசியத்தை வலியுறுத்தி இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பு மாடுகளை அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே வித்தியாசமாக காணப்பட்டது.

கால்நடைகளின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாடுகளின் படத்தை கோலங்களில் வரைந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை அளித்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of