சீற்றம் குறையாத 7 லட்சம் ஆண்டு பழமையான “Mauna Loa”

231

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்றளவும் மக்களை அச்சுறுத்தும் பல இயற்க்கை சீற்றங்களில் முதன்மையானது எரிமலை சீற்றம். உயர் தொழில்நுட்பத்தால் மட்டுமே ஒரு எரிமலை உயிருடன் உள்ளதா? இல்லையா? என்பதை அறியலாம். “உயிருள்ள எரிமலை” (Active Volcano) என்ற இந்த சொல் பல்வேறு விஷயங்களை குறிக்கின்றது. சில நேரங்களில் ஒரு எரிமலையின் மேற்பரப்பின் கீழ் இருக்கும் சூடான நெருப்புக்குழம்பு ஒரு நிலையான நிலையில் இருந்தால் அதை உயிருள்ள எரிமலை என்று கூறலாம்.

எரிமலையை சுற்றி பல அடி ஆழத்தில் இருந்து நீராவி வெளியேறினால் அந்த எரிமலை உயிருள்ள எரிமலை என்று கூறலாம். இதுமட்டும் இன்றி பலவகை செயல்கள் மூலம் ஒரு எரிமலை உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதை அறியலாம்.

2018ம் ஆண்டின் ஆய்வின்படி பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவில் உள்ள ஐந்து பெரும் எரிமலைகளில் ஒன்றாக திகழும் “மௌனா லோவா” (Mauna Loa) தான் உலகில் உயிருள்ள மிகப்பெரிய எரிமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,170 மீ (13,680 அடி – தோராயமாக 6 மைல்) உயர்ந்து நிற்கிறது. சரியாக சொன்னால் கடல் மட்டத்திலிருந்து கணக்கிடும்போது “மௌனா லோவா” எவெரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது.

ஆச்சர்யப்படவைக்கும் விதமாக இந்த உயிருள்ள எரிமலையின் கொள்ளளவு சுமார் 10,200 கன மைல் (42,500 கன கிலோமீட்டர்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 60 மைல் நீளத்திலும் 30 மைல் அகலத்திலும் பரந்துவிரிந்து காணப்படும் இந்த எரிமலை ஒரு தீவில் பாதி அளவை கொண்டது. “மௌனா லோவா” உலகில் உள்ள மிகவும் உயிரோட்டம் உள்ள எரிமலையாக கருதப்படுகிறது. சுமார் 7 லட்சம் வயதுள்ளதாக கருதப்படும் “மௌனா லோவா” கடந்த 1 லட்சம் ஆடுகளாக பலமுறை வெடித்துள்ளது. 1843 முதல் இதுவரை 33 முறை இந்த எரிமலை குமுறியுள்ளது, இறுதியாக கடந்த 15 ஏப்ரல் 1984ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of