மூழ்கிக்கொண்டு இருக்கும் பாஜக-வை யாராலும் காப்பாற்ற முடியாது..,

372

அனல் பறக்கும் நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெறுங்கி வரும் நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

தேர்தலை முன்னிட்டு சாலைகளில் பேரணிகள், மத தலங்களில் வழிபாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் கட்சிகள் பெரிய தொகைகளை செலவிட்டு வருகின்றன. எனவே தேர்தல் ஆணையம் இந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்.

பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.இதுகுறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கும். ஏனெனில் இத்தேர்தலில் பாஜக அரசு நிச்சயம் தோல்வியை தழுவும் என்பதில் எந்த அய்யமுமில்லை.

மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of