‘மசூத்அசாரையும் விட்டுவைக்காத பாஜக’.., மாயாவதி காட்டம்

442

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.

இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

இந்த நிலையில் மசூத் அசார் பெயரை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பயன்படுத்துவதா, என்று மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அவர் இது தொடர்பாக கூறுகையில்,

முந்தைய பா.ஜனதா அரசு தான் மசூத்அசாரை விருந்தாளி போல் நடத்தியது. பின்னர் அவரை விடுவித்தது தற்போது தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக மசூத் அசார் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது. இது கண்டனத்துக்குரியது.

இதே போல மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் தியாகத்தையும் பா.ஜனதா தேர்தலுக்கு பயன் படுத்துகிறது. நாட்டின் எல்லை பகுதிகள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை. அதனால் தான் எல்லையில் தொடர்ந்து அத்து மீறல்களும், ஊடுருவல்களும் நிகழ்கின்றன.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெரிய அளவிலான வாக்குறுதிகளையும், கவர்ச்சிகரமான திடங்களையும் அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன. அதை கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே மனநிலையில் உள்ள கட்சிகள் ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of