தண்ணீர் பஞ்சம்! எச்சரிக்கை கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை!

556

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிறுகளந்தையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் காலகட்டங்களில் அதிக செயற்கைகோள்களை உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பருவநிலை மாற்றங்களால், மழைப்பெழிவை துல்லியமாக கணிக்க முடியாது என்றும், ஏரி குளங்களை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

எதிர்காலத்தில் வீடுவீடாக மழை நீரை சேமித்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of