எம்.பி.ஏ படிக்க பொது நுழைவுத் தேர்வு

666

எம்.பி.ஏ படிக்க பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் – குர்மீத் சிங்

புதுவைப் பல்கலைக்கழகத்தில் இனி எம்.பி.ஏ படிக்க பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மேலாண்மைப் படிப்பு மற்றும் பன்னாட்டு வணிகவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி வரும் கல்வியாண்டு முதல், புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க, பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும், அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும் புதுவை பல்கலைகழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்காக 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.