MBBS, BDS படிப்புகளில் சேர, நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

444

MBBS, BDS படிப்புகளில் சேர, நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

MBBS, BDSபடிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of