மதிமுக வேட்பாளர் பெயர் வெளியீடு! வைகோ பேட்டி!

191

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.