ஆட்சியைத் தக்க வைக்க வெளியிட்டுள்ள பட்ஜெட் – வைகோ

128

திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது பேசிய வைகோ பொருளாதார இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று என்றும் உயர்வகுப்பினரின் வாக்கை பெறுவதற்காகவே 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

முன்னதாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியைத் தக்க வைக்க வெளியிட்டுள்ள வெற்று அறிவிப்புகளின் குவியல் என்றும் வைகோ விமர்சனம் செய்தார்.

மேலும் மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சென்னை தூத்துக்குடி சரக்கு தொடர் வண்டிப் பாதை போன்ற எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை எனவும் தெரிவித்தார்.